மெல்ல மெல்ல மீண்டுவரும் தமிழகத்தின் குட்டி சிங்கப்பூர்…!

தமிழகத்தில் தீவு என்றால், அது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் தான். அதையும் தாண்டி மெல்லிய கோடாக மாறி எஞ்சி நின்று வரவேற்கிறது தனுஷ்கோடி.

பாம்பன் வழியாக தனுஷ்கோடி வரை சென்ற ரயிலிலும் அங்கிருந்து இலங்கையின் தலைமன்னார் வரை கப்பலிலும் வணிகம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், 1964 டிசம்பர் 23ஆம் தேதி வரை வர்த்தக நகராக இருந்த தனுஷ்கோடி புயலின் கோர பிடியில் சிக்கி இந்திய வரைபடத்தில் இருந்து உள்வாங்கிக் கொண்டது.

இருந் போதிலும், அங்கேயே சிலர் வாழ்ந்து வந்தனர். இதனிடையே சாலை அமைக்கப்பட்டதை தொடர்ந்து உள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

தேவாலயம், ரயில் நிலையம், அஞ்சலகம், உருக்குலைந்த மாளிகைகளின் எச்சங்களை பார்த்து வியக்கின்றனர் அங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள்.

புயலின் போது சென்ற ரயில், அதில் சென்ற பயணிகளின் நிலை இன்றுவரை யாரும் அறியாதது. கால ஓட்டத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ள தனுஷ்கோடி மூலம் பொருள் விற்பனையிலும், பிறமொழி கற்றலும் நடைபெறுகிறது.

தமிழகத்தின் முந்தைய குட்டி சிங்கப்பூருக்கு மின்வசதி, கழிவறை, புதிய வீடுகள் கட்டுதல் போன்றவை தேவையாக இருக்கிறது.

நன்றி : தந்தி டிவி