பல லட்சம் மதிப்புடைய மின்னணு படுக்கைகளை வழங்கிய சிங்கப்பூர் அரிமா சங்கம்..!

சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்னணு கீமோ படுக்கைகளை சிங்கப்பூர் அரிமா சங்கத்தினர் வழங்கினர்.

சென்னை ஃபீனிக்ஸ் அரிமா சங்கம் மற்றும் சிங்கப்பூர் கார்டன் சிட்டி அரிமா சங்கம் சார்பில் குழந்தைகளின் சிகிச்சைக்கு பயன்படும் வகையில், 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 7 மின்னணு கீமோ படுக்கைகளை வழங்கப்பட்டன.

சிங்கப்பூர் லயன்ஸ் குழுவின் தலைவர் திரு.லயன் வெண்டி லிவ் மற்றும் சிங்கப்பூர் லயன்ஸ் கிளப்பின் 8-ஆவது மண்டலத் தலைவர் திரு.லயன் கோ யூ செங் ஆகியோர் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குனர் திருமதி.ரேமா சந்திரமோகன், புற்றுநோய் சிகிச்சை பிரிவு பேராசிரியர் திரு.ரவிச்சந்திரன் ஆகியோரிடம் வழங்கினர்.

இந்த படுக்கைகள் மூலம், தினசரி 40 குழந்தைகள் பயனடைவார்கள் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.