சரவண பவன் எனும் மிகப்பெரிய உணவக சாம்ராஜ்யத்தின் நிறுவனர் காலமானார்!

பிரபல தொழிலதிபரும், சரவணபவன் உணவகத்தின் நிறுவனருமான ராஜகோபால் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார்.

ஆரம்ப காலத்தில் சென்னை கே.கே நகரில் மளிகைக் கடை நடத்தி வந்த ராஜகோபால் அவர்கள் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வந்தார். அந்த வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டதால் அதை மூடிவிட்டு, மீதம் கையிருப்பாக இருந்த மளிகைப் பொருட்களைக் கொண்டு கே.கே.நகரில் ஓட்டல் சரவணபவன் என்ற பெயரில் முதல் உணவகத்தை தொடங்கினார்.

பின்னர், கடும் உழைப்பால், தமிழகம் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் உணவகத்தைத் தொடங்கி, மிகப்பெரிய உணவக சாம்ராஜ்யமாக சரவண பவனை விரிவுபடுத்தினார்.

இவர் கிருபானந்த வாரியாரின் சீடராக இருந்தார். கோவில்களுக்கு பல திருப்பணிகளையும் செய்துள்ளார். உடல் நிலை குறைவு காரணமாக சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால், சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

உடல்நிலை மிக மோசமாக இருந்ததால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனை அடுத்து சிகிச்சை பலனின்றி சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலன் உயிரிழந்தார்.