வீட்டிலிருந்தபடி Vehicle E-Pass வாங்க புது இணையதள வசதி

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக கடந்த மார்ச் 24 முதல் ஏப்ரல் 14 வரை நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பின்னர் மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அவசியமில்லாமல் வெளியே சுற்றித்திரியும் பலரை போலீசார் கைது செய்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர். இதனால் அவசர தேவைக்காக வெளியே செல்பவரும் பல கேள்விக்கு ஆளாகின்றனர்.

இதற்கு முடிவுகட்ட தமிழக அரசு புதிய இணையதள செயல்பாட்டை கொண்டு வந்துள்ளது.

https://serviceonline.gov.in/tamilnadu/directApply.do?serviceId=721

அவசரத் தேவைகளுக்கு நீங்கள் வெளியே செல்ல வேண்டும் என்றால், மேலே உள்ள லிங்க் மூலமாக இணையத்தினுள் சென்று உள்ளே கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான காரணங்களை பதிவு செய்து தங்கள் மொபைலில் ஓ.டீ.பி(One Time Password) பதிவு செய்து காத்திருக்கவும் நீங்கள் செல்லலாம் என்ற உத்தரவு வந்தவுடன் உங்கள் வாகனத்துடன் வெளியே செல்லலாம்.

இந்த பாஸ் இல்லாமல் வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதித்தும், வாகனங்களை பறிமுதல் செய்யவும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.