இந்தியாவின் 4 நகரங்களில் இருந்து “திருப்பி அனுப்பும்” விமானம் – ஏர் அரேபியா அறிவிப்பு

இந்தியாவின் நான்கு நகரங்களில் இருந்து ஐக்கிய அரபு நாட்டினரை அவர்களின் சொந்த நாட்டிற்கு அழைத்துச் செல்ல திருப்பி அனுப்பும் விமானங்களை இயக்குவதாக, ஏர் அரேபியா விமான நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது.

மேலும், மும்பை மற்றும் டெல்லியில் இருந்து ஷார்ஜா சர்வதேச விமான நிலையத்திற்கு சிறப்பு விமானங்கள் நேற்று (ஏப்ரல் 20) இயக்கப்பட்டது, அதே நேரத்தில் கொச்சின் மற்றும் ஹைதராபாத்தில் இருந்து ஷார்ஜா சர்வதேச விமான நிலையத்திற்கு சிறப்பு விமானங்கள் ஏப்ரல் 22 ஆம் தேதி இயக்கப்படும்.

விமான நிறுவனம் கூறுகையில், “ஏர் அரேபியா, சிக்கித் தவிக்கும் குடிமக்களை வீட்டிற்கு அழைத்து வருவதற்கும், திருப்பி அனுப்பும் விமானங்களை இயக்குவதற்கான கோரிக்கைகளை ஆதரிப்பதற்கும் உறுதியுடன் உள்ளது. இது தொடர்பாக ஐக்கிய அரபு நாட்டின் அதிகாரிகளுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதத்தில் பல இடங்களுக்கு திருப்பி அனுப்பும் விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்களின் கலவையை இயக்குவதாக விமான நிறுவனம் முன்பு அறிவித்தது. ”

“கோவிட் 19ன் பரவலைக் கட்டுப்படுத்த திருப்பி அனுப்பும் விமானங்களின் போது தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க ஷார்ஜா ஏர்போர்ட் உறுதியாக உள்ளது.” என்று ஷார்ஜா ஏர்போர்ட் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

திருப்பி அனுப்புதல் மற்றும் சரக்கு விமானங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு airarabia.com-ஐ தொடர்புகொள்ளுமாரு ஏர் அரேபியா நிறுவனம் கூறியுள்ளது.