கொரோனா வதந்திகள் – புதிய கட்டுப்பாடுகளுடன் ‘வாட்ஸ் அப்’

கொரோனா வைரசை விட வாட்ஸ்அப்-ல் பகிரப்படும் போலியான தகவல்களே மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதனால் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய கட்டுப்பாடுகளுடன் தன் செயலியை புதுப்பிக்கவுள்ளது. இது பலமுறை பகிர்வதால் வரும் பிரச்சனை என்பதால், ஒருமுறை மட்டுமே பகிரமுடியும் என்று புதிய கோட்பாடுகளைக்கொண்டு புதுப்பிக்கவுள்ளது.

தற்போது நாம் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியில் பலமுறை பகிரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது, ஆனால் இனி வரும் வாட்ஸ்அப்-ல் 5 முறைக்குமேல் பகிரப்பட்ட செய்தியை ஒருமுறை மட்டுமே பகிரமுடியும் என்றதுபோல் வடிவமைக்கப்பட உள்ளது. வதந்திகளையும் போலி செய்திகளையும் பகிர கூடாதென மத்திய,மாநில அரசுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மேலும் தவறான செய்திகளை பரப்புபவர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 2019-ல் வாட்ஸ்அப் செயலியை புதுப்பித்தபோது, “பகிரப்பட்டது” என்ற அடையாளத்துடன் செய்தி பகிரப்படும்படி வடிவமைக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா பற்றி தவறான தகவல்கள், செய்திகள், வீடியோக்கள் பகிரப்படுவதால், வாட்ஸ்அப் நிறுவனம் அவசரமாக இந்த புதுப்பிக்கும் செயலை செய்துவருகிறது. இதுபோல பகிரப்படும் வீடியோக்கள், வதந்திகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு அச்சத்தையும், உயர் அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியையும் ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப் செயலி “பீட்டா” எனப்படும் ஒரு புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. அந்த பீட்டா அம்சத்தின் செயல்பாடு என்னவென்றால், அதிகமாக பகிரப்பட்ட செய்தி அதற்கு அடுத்ததாக ஒரு பூதக்கண்ணாடி அடையாளத்தை காண்பிக்கும், இது பயனர்களுக்கு அந்த செய்தியை ஒரு வலைத் தேடலுக்கு அனுப்புவதற்கான வாய்ப்பை வழங்கும், இது செய்தி முடிவுகள் அல்லது இடுகை தொடர்பான பிற தகவல்களின் ஆதாரங்களைக் காட்டுகிறது.

சில செய்திகளின் நம்பகத்தன்மையை எளிதில் சரிபார்க்கும் திறனும் வதந்திகளின் பரவலைக் குறைக்க உதவும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் நம்புகிறது. இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்கும் எப்போது வழங்கப்படும் என்பதை வாட்ஸ்அப் நிறுவனம் அறிவிக்கவில்லை.

தொற்றுநோய்களின் போது இந்த தளம் எவ்வாறு வேணாலும் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்பதைப் புரிந்துகொண்டு, கொரோனா குறித்த நம்பகமான தகவல்களுக்கு உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய அரசின் MyGov பயன்பாட்டுடன் மக்களை இணைக்க வாட்ஸ்அப் சமீபத்தில் சேவைகளை அறிமுகப்படுத்தியது.

உலக சுகாதார மையம்(+41 798 931 892), டெல்லி (+91 88000 07722), மகாராஷ்டிரா (+91 20 2612 739), குஜராத் (+91 74330 00104), தெலுங்கானா (+91 90006 58658) மற்றும் கேரளா (+91 90722 20183). இதுபோன்ற மேலும் சேவைகள் வரும் வாரங்களில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.