டிஸ்கவரி சேனலின் பிரபல Man vs Wild நிகழ்ச்சியில் கலக்கும் இந்திய பிரதமர் மோடி!

உலகம் முழுவதும் மக்களால் அதிகம் அறியப்பட்ட ஒரு பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது டிஸ்கவரி சேனலின் Man vs Wild நிகழ்ச்சியாகும்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்தர மோடி கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். Man vs Wild நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் காடுகளில் பயணம் செய்வதில் பெரும் புகழ் பெற்றவர். யாரும் செல்ல முடியாத ஆபத்து நிறைந்த காடுகளுக்குள் சென்று அதில் உள்ள வியக்கத்தக்க செய்திகளை பற்றி நம்மிடம் எடுத்து கூறுவார்.

மேலும், பாலைவனத்தில் பயணம் செய்வது, அதில் தண்ணீர் சேகரிக்க போராடுவது போன்ற பல சாகசங்கள் அவர் நிகழ்த்தி காட்டுவார். இந்நிலையில் பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் அவருடன் சேர்ந்து சாகச பயணம் மேற்கொண்டார்.

இதற்கான டிரெய்லர் கிரில்ஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.