மகாகவி பாரதியின் பிறந்தநாள்; இந்திய பிரதமர் மோடி புகழாரம்!

Indian pm Modi tributes to ‘Mahakavi’ Bharathiar on his birth anniversary

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

பாரதியாரின் எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நமக்கு எழுச்சியூட்டும் விதமாக உள்ளதாகவும், மற்ற அனைத்தையும் விட நீதியும் சமத்துவமும் மேலானவை என நம்பியவர் மகாகவி சுப்ரமணிய பாரதியார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகாகவி பாரதி “தேசபக்தி, சமூக சீர்திருத்தம், கவிதையில் மேதை, சுதந்திரம் மற்றும் அச்சமின்மையின் தூண்டுதலின் சின்னம்” என்று மோடி பாராட்டி கூறினார்.

மேலும், தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் கூற்று ஒன்றே, மனிதர்களின் அவதியை போக்குவதிலும், அதிகாரமளிப்பதிலும் அவருக்கு இருந்த பார்வையை விளக்க போதுமானது என்றும் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பாரதி எனும் மாமனிதரின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்வதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.