இந்தியர் மரணத்திற்கு COVID-19 நோய்த்தொற்று காரணம் இல்லை – சுகாதார அமைச்சகம் (MOH)..!

சிங்கப்பூரில் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 23) கூ டெக் புவாட் (Khoo Teck Puat) மருத்துவமனையில், படிக்கட்டில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அவர் 46 வயதான இந்தியர் எனவும், படிக்கட்டில் அசைவில்லாமல் இருந்ததாகவும், பின்னர் அவர் காயங்களால் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியானது.

முழு விவரம் : சிங்கப்பூர் கூ டெக் புவாட் (Khoo Teck Puat) மருத்துவமனையில் இந்தியர் உயிரிழப்பு..!

இந்நிலையில், அவரது மரணம் COVID-19 நோய்த்தொற்றின் காரணமாக ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

மேலும் அவரது இந்த மரணம், உயரத்திலிருந்து வீழ்ந்ததினால் ஏற்பட்ட பல காயங்களுடன் ஒத்துப்போவதாகவும் MOH குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் 8190 சம்பவமாக உயிரிழந்த இந்தியர் அடையாளம் காணப்பட்டார்.

மேலும், அவரது மரணம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க : COVID-19: வேலை அனுமதி உடையோர் 853 பேர் பாதிப்பு; 9 புதிய நோய் பரவல் குழுமங்கள் அடையாளம்..!