மே 7ம் தேதி தொடங்கும் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி : மத்திய அரசு

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி இந்த மாதம் 7ஆம் தேதி முதல் தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது .

உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளில் சிக்கித் தவித்து வருகின்றனர் இவர்களை மீட்கும் பணியை கடந்த மாதம் துரிதப்படுத்தியது மத்திய அரசு.

மத்திய அரசு தற்போது வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி மே 7-ம் தேதி தொடங்கும் என தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன தமிழக அரசும் அதற்கென்று தனி இணையதளத்தை தொடங்கி வெளிநாடுகளில் இருந்து தாயகம் வர விரும்புபவர்களின் விவரங்களை சேகரித்து வருகிறது.

தற்போது இந்தியர்கள் எந்தெந்த நாடுகளில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்ற விவரங்களை தூதரகங்கள் சேகரித்து வருகின்றனர். வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர விமானங்கள் மற்றும் கப்பல்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தற்போது வரை வெளியான தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.