விமானி போல ஆடை அணிந்து விமானத்தில் பயணிக்க முயன்ற இந்தியர் கைது!

Indian man arrested for posing as pilot to gain special treatment & impress women

டெல்லியில் லுப்தான்சா விமான சேவை நிறுவனத்தின் விமானி போல நடித்து, விமானத்தில் பயணம் செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

48 வயதான இந்திய தொழிலதிபர் ராஜன் மஹ்புபானி, சிறப்பு சலுகைகளை பணிப்பெண்களிடம் பெறுவதற்கும், விமானங்களுக்கான பாதுகாப்பு சோதனைகளைத் தவிர்ப்பதற்கும், தன்னை விமானி போல காட்டியதற்காக டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

டெல்லி விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தா செல்லவிருந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணிக்க முயன்ற அவர் மீது அந்நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சந்தேகமடைந்தனர்.

இதனால், லுப்தான்சா நிறுவனத்தை தொடர்பு கொண்டு விசாரித்த போது, அந்த நபர் விமானி இல்லை என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தியதில், வரிசையில் நிற்பது, விமானிகளின் சலுகைகளை பெறுவதற்காக இதுபோன்று ஆள்மாறாட்டம் செய்ததை அந்த நபர் ஒப்புக் கொண்டார்.

மேலும், பாங்காங்கில் தயாரிக்கப்பட்ட போலி அடையாள அட்டையை வைத்து, 15-க்கும் மேற்பட்ட முறை விமானியாக விமானங்களில் பறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.