‘இந்தியன் 2’ ஷூட்டிங் விபத்து – தமிழ் மைக்செட் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்

Indian 2 accident, kamalhaasan

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் உதவி இயக்குனர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயம் அடைந்துள்ளனர்.

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் – 2 படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்காவில் நடைபெறுவதாக இருந்தது. அதற்காக பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுப்பட்ட போது அதை தாங்கி நின்ற கிரேன் எதிர்பாராத விதமாக சரிந்து கீழே விழுந்தது.

இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற்ற தனியார் இடம்

கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டதில் உதவி இயக்குனர் சந்திரன், படப்பிடிப்பு தளத்தில் உணவு அளித்து வந்த மது, சந்திரன் ஆகிய மூன்று பேர் பலியானார்கள். 9 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்தில் உயிரிழந்த உதவி இயக்குனர் கிருஷ்ணா, உணவு வழங்கிய ஊழியர் மது

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து தொடர்பாக கிரேன் ஆப்பரேட்டர், ராஜன் என்பவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த கமல்ஹாசன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிதியுதவி செய்வதாக கூறினார்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் வைக்கப்பட்டிருந்த கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கமல்ஹாசன், தயாரிப்பாளர் லைக்கா சுபாஷ்கரன் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

படப்பிடிப்பு விபத்தில் உயிர் இழந்தவர்கள், காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு மொத்தம் 2 கோடி இழப்பீடு வழங்கப்படும் என லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 லட்சமும், மீதி உள்ள தொகையை ஃபெப்சி யூனியன் மூலம் காயமடைந்தவர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக லைக்கா நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.